*தூத்துக்குடி மக்களின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா ?*
1. நச்சுஆலை என்பதால் சீல் வைத்து பூட்டி தமிழகஅரசு, மூடிய ஆலையை அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது ஏன் ?
2. *_தமிழகத்தில் இந்த ஆலைக்கு இடமில்லை என்று கூறிய பின் நீதிமன்றத்தில் இந்த ஆலை வழக்கு தொடரும் வரை அவகாசம் அளிப்பது ஏன் ?_*
3. அரசாங்கமும் மக்களும் எதிர்க்கும் ஆலையை அரசாணையிட்டு சீல் வைத்த பிறகு ஆலைக்கு ஆதரவாக மனு அளிப்பவர்களை கண்டித்து கைது நடவடிக்கை எடுக்காமல் எதிர்ப்பு தெரிவிப்புவர்களை மட்டும் தொடர்ந்து மிரட்டப்படுவது ஏன்?
4. *_எல்லாவற்றிக்கும் மேல் முடிய ஆலைக்கு(அரசாங்கம் இனி இயங்காது என சீல் வைத்தஆலைக்கு) நாளிதழ்கள் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களை அரசு தடை செய்யாமல் வேடிக்கை பார்ப்பது நியாயம் தானா ?_*
5. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் சுதந்திர தினத்தன்று வெளிவந்த நாளிதழில் நம் மாவட்டத்தை சார்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சி மற்றும் பாரதி படத்தை போட்டு ஆலை விளம்பரம் நாளிதழ்களில் வந்துள்ளது. இதற்காகவே அரசாங்கம் இவர்கள் மீது வழக்கு போடலாம் அவர்கள் தியாகிகள் காப்பர் கம்பெனியின் தூதர்கள் அல்ல.
6. *_கடந்த 9 தேதி தேசிய பசுமை தீர்பாயத்தின் விசாரனையில் அவன் ஆலை இயங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசுஅதிகாரிகள் முன்னிலையில் ஆலை இயங்க 30 நாள் அவகாசம் கோரினான். நிர்வாக அலுவலகம் செயல்பட அனுமதி கோரினான். நிர்வாக அலுவலகம் செயல்பட அனுமதி கிடைத்தது. இனி ஓடவே கூடாது/முடியாது என்கிற ஆலைக்கு என்ன நிர்வாக வேலை ? நிர்வாக திறப்பு நாடகம் எதற்கு ?_*
7. 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தியதால் தண்டனையாக 100 கோடி அபராதம் விதித்தது. ஸ்டெர்லைட் ஆலை ஒப்புக்கொண்டு அபராதத்தை கட்டியது. தற்போது நாளிதழ்களில் 23 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மற்றும் மக்களை காப்பாற்றி வருவதாகவும் ஆலையால் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்று அப்படமாக நீதிமன்றத்தையும் தீர்ப்பினையும் அவமதிக்கும் விதமாக விளம்பரம் வெளியிடுவது சரிதானா ? இதற்காக நச்சுஆலை ஸ்டெர்லைட் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடராதது ஏன் ?
8. *_பலமுறை முறையிட்டும் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த நிறுவனத்திற்கு சரக்குகளை ஏற்றி செல்லும் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு ஒரு பாத்ரூம் கட்ட வக்கில்லாத ஆலை இன்று செயல்படாத நிலையில் கல்வி உதவி தொகை வழங்குவதாக இயலாமையில் உள்ள மாணவர்களை அழைத்து ஆலையில் விழா நடத்தி நாளிதழ்களில் பெரிதாக போடுகிறதே இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிப்பதும். துப்பாக்கி சூட்டில் நடந்த உண்மைகளை ஓய்வு பெற்ற நீதியரசர்கள் முன் வெளியிடுவதை காவல்துறை தடுப்பதும் காவல்துறை யாருக்காக செயல்படுகிறது என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துகிறது._*
9. நேற்று ஆகஸ்ட் 20 ம் தேதி தேசிய பசுமை தீர்பாயத்தின் விசாரணையில் ஆலை வைத்த கோரிக்கை தான் மிகுந்த ஆத்திரத்தை வர வைத்தது விசாரணை நீதிபதி தமிழ்நாட்டை சார்ந்தவராக இருக்க கூடாதாம். அப்பறம் எதுக்குடா இந்த ஆலை தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் ?.
10. *_நீதிபதி நியமனம் நிபுணர்கள் ஆய்வுகள் எல்லாம் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உணர்கிறோம். தமிழக அரசு அமைச்சரவையைக் கூட்டி கொள்கை முடிவாக நச்சுஆலை ஸ்டெர்லைட்டிற்கு நிரந்தர தடை என்று அறிவிக்க வேண்டும். இதை செய்யாதது ஏன் ?_*
இவ்வளவு நடந்தும் நாம் நம்பிக்கை இழக்காமல் உண்மை வெல்லும் என்று காத்திருப்பதால் கோமாளிகள் என்று நினைத்துவிட வேண்டாம். நம் சகோதர சகோதரிகள் ஆத்மா நமக்கு நல்ல வழிகாட்டும். நாம் கடவுள் துணையோடு போராடுவோம் வெற்றி பெறுவோம்.
*_இனி ஒருமாதம் அல்ல ஒரு மணிநேரம் கூட நச்சுஆலை ஸ்டெர்லைட் தூத்துக்குடியில் ஓட்ட முடியாது._*
நல்லதே நினைப்போம்
நல்லதே நடக்கும்.
*_ஸ்டெர்லைட் மக்கள் இயக்கம்_*
No comments:
Post a Comment