*செல்ஃபீ மோகத்தால் 4 வயது குழந்தை பலி.*
*பாலத்தில் அமர வைத்து செல்ஃபீ எடுக்க முயன்றதில் நிகழ்ந்தது விபரீதம்.*
_பெற்றோரின் செல்ஃபீ படம் எடுக்கும் ஆசையால் 4 வயது குழந்தை காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டது பெறும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவு காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால் ஆறு செல்லும் வழித்தடங்களில் எல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் தண்ணீரை கண்டு களித்து வருகின்றனர். பலர் ஆசையாக புகைப்படங்களும் எடுத்து கொள்கின்றனர். அந்த வகையில் கரூரைச் சேர்ந்த பாபு என்பவர் மனைவி குழந்தையுடன் மோகனூர் அருகே காவிரி ஆற்று பாலத்தில் நின்று செல்ஃபீ எடுத்து கொண்டிருந்தார்._
_அப்போது 24வது தூண் மேல் தனது 4 வயது ஆண் குழந்தை தன்வந்த்தை அமரவைத்து செல்ஃபீ எடுக்க முயன்றுள்ளார். எதிர்பாராத விதமாக காவிரியில் விழுந்த குழந்தை வெள்ளநீரில் அடித்து சென்றுவிட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அலறி துடித்தனர். என்றாலும் குழந்தையை மீட்க முடியவில்லை. குழந்தையின் உடலை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் இறங்கி உள்ளனர். பெற்றோரின் செல்ஃபீ படம் எடுக்கும் ஆசையால் 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது._
No comments:
Post a Comment